குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கியின் சில உயர் அதிகாரிகள் இரகசிய தகவல்களை கசிய விடுவதாக நிதி அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். மிகவும் முக்கியமானதும் இரகசியமானதுமான தகவல்களை உயர் அதிகாரிகள் ஊடகங்களுக்கு வழங்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மத்திய வங்கியில் தற்போது கடமையில் இல்லாத ஒருவரை பிரதி ஆளுனராக நியமிக்க தாம் முயற்சிப்பதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் பொய்யானவை என குறிப்பிட்டுள்ள அவர் இந்த தகவல்களை யார் வழங்கியது என்பதனை அறிந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
நிதிச் சபையைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் பங்கேற்றிருந்த கூட்டமொன்றில் பேசப்பட்ட விடயங்கள் கசிந்துள்ளதாகவும் இந்த விடயம் குறித்து சபாநாயகர் விசாரணை நடத்த வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.