சசிகலா பதவி ஏற்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு சசிகலா பதவி ஏற்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க இயலாது என நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றில் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவர உள்ளதால் அதுவரை அவர் பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் இன்று சட்டத்தரணிகள் உச்சநீதிமன்றத்தை அணுகி, இந்த வழக்கை அவசரமாக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க இயலாது என தெரிவித்து அவர்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டது.
சசிகலா பதவி ஏற்பு – தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு:-
143
Spread the love