176
பெரஹராக்களுக்கு யானைகள் வழங்கப்படுவது நிறுத்தப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹூனுபிட்டி கங்காராமய விஹாரையின் வருடாந்த பெரஹராவில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யானைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்காக பெரஹராக்களில் யானைகளை பயன்படுத்த தடை விதிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ள அவர், சட்டவிரோதமான முறையில் யானைகள் விற்பனை மற்றும் கொள்வனவு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் யானைகளை சட்டவிரோதமாகய வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Spread the love