194
தமது சொந்த இடங்களை விடுவிக்க கோரி கடந்த 11 நாட்களாக தொடர்ந்து போராடிவரும் கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 9.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்டு வரும் இந்தப் போராட்டத்தை சமூக வலைத்தளங்களுக்கூடாக இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
தன்போது, ‘நாமே எமக்கு காப்பு, இராணுவத்தை வெளி நீக்கு’, ‘மக்கள் பசியில் படை வளர்ப்பது தான் நல்லிணக்கமா? நல்லாட்சியா?’, ‘இந்த மண் எங்களின் சொந்த மண்’, ‘கொய்யா சாப்பிடும் அணிலு, கேப்பாப்பிலவு சாப்பிடுறான் ரணிலு’, ‘எமது நிலத்தை எமக்கு திருப்பித் தா’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.
போராட்ட முடிவில், ஒரு தொகுதி இளைஞர்கள் யாழிலிருந்து கேப்பாப்பிலவு சென்று, அங்கு தொடர்ந்தும் 12ஆவது நாளாகவும் போராடி வரும் மக்களுக்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளனர்.
Spread the love
1 comment
is it rayakaran?