153
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை வழமைபோல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை ஒரு அறையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் அந்த அறை இடிந்து தரைமட்டமானதாகவும் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் எனவும் தீ விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love