192
பாகிஸ்தானில் படகு ஒன்று ஆற்றில் மூழ்கியதில் 5 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள் புனித தலம் ஒன்றுக்கு 30 பேருடன் சென்று கொண்டிருந்த படகே நடு ஆற்றில் தண்ணீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் 5 உடல்களையும் 20 பேரையும் மட்டுமே மீட்டுள்ளதுடன் ஏனைய 5 பேரையும் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதே படகு மூழ்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love