170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் அவுஸ்திரேலியாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று அவுஸ்திரேலியா புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் விசேட அழைப்பினை ஏற்றுக்கொண்டு அங்கு செல்லும் பிரதமர் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல்லையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதுடன் இரு தரப்பு உடன்படிக்கைகள் சிலவும் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமருடன் எட்டு பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்றும் அவுஸ்திரேலியரிவற்கு செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love