குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெற்றிகரமான முறையில் ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது என அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜொங் தெரிவித்துள்ளார். கொரியாவின் அரச ஊடகங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட தூரம் சென்று இலக்கினை தாக்கக் கூடிய ஏவுகணை ஒன்றே இவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டது எனவும் இந்த சோதனையானது புதிய வகை முயற்சியாக அமைந்துள்ளதாகவும் வடகொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
அணு ஆயுத உற்பத்தி, ஏவுகணை பரிசோதனை என்பவற்றிற்கு எதிராக சர்வதேசம், வடகொரியா மீது பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வரும் நிலையில் தொடர்ந்தும் வடகொரியா இவ்வாறான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு புதிய அமெரிக்க அரசாங்கம் எவ்வாறான பதிலடியை வழங்கும் என்பது இன்னமும் தெரியவரவில்லை.