160
யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள 31 இந்திய மீனவர்களும் தம்மை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது படகுகளை விடுவிக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர். தமிழகத்தின் தங்கச்சிமடம், இராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 31 மீனவர்களே இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த பல மாதங்களாக தாம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது குடும்பங்களை இழந்து பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Spread the love