தமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லாததால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்றையதினம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நீட் தேர்வு குறித்த குழப்பம் மாணவர்களிடம் நிலவுகிறது, அதற்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது, அதற்கான நிவாரணம் எதுவும் அரசு அறிவிக்கவில்லை.
அதிமுக.வில் யார் தலைமைப் பொறுப்பை கைப்பற்றுவது என பதவி வெறி நிலவுகிறது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காபந்து முதல்வராக இருந்தும் எந்தக் கவலையும் இல்லாமல் தொடர்ந்து இருக்கிறார் எனத் தெரிவித்த ஸ்ராலின் ஆளுனர் உடனடியாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் சாசனத்தின் மாண்பை காக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.