உடல் நிலை சரியில்லை என்பதால் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் எனத் தெரிவித்து சசிகலா நீதிமன்றத்தில் சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதாகவும் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பதால் கட்சிப் பணிகள் இருக்கின்றதெனவும் அதனையும் சரி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். குறித்த மனு இன்று பிற்பகலுக்கு பின் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம் மூன்று பேரும் உடனடியாக சரணடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.