165
அ.தி.மு.க சட்டமன்ற தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்றைய தினம் சந்திப்பதற்கு தமிழக ஆளுனர் நேரம் ஒதுக்க கொடுத்ததனைத் தொடர்ந்து அவர் கூவத்தூரிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருடன் மேலும் 12 பேர் சென்றுள்ளனர்.
அ.தி.மு.க.-வின் புதிய சட்டமன்ற கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க ஏற்கனவே உரிமை கோரியிருந்த நிலையில் தற்போது அவரைச் சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கி, சந்திப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love