குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டத்திற்கான பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று 15-02-2017 காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமான கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பேருந்து நிலையம் அமைப்பதற்கான திட்ட முன் மொழிவுகள் மற்றும் அமைவிடம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகாமையில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தினையும் பார்வையிட்டனர்
குறித்த இன் நிகழவில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண நகர அபிவிருத்திப் பணிப்பாளர் ,வடமாகான தனியார் போக்குவரத்து சபைத் தலைவர் ,தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் மாவட்ட வீதி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் கரச்சி பிரதேச செயளர் கிளிநொச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
00