147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நசீர் ஜம்சத் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் வைத்து நசீர் ஜம்சத்துடன் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளின் அடி ப்படையில் ஜம்சத் கைது செய்யப்பட்டுள்ளார். 2015ம் ஆண்டின் பின்னர் ஜம்சத் பாகிஸ்தான் அணிக்காக விளையாட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட ஜம்சத் மற்றும் ஏனைய நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love