குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிதி அமைச்சர் ரவி கருணநாயக்கவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது. இந்த முறைப்பாட்டை செய்ய உள்ளதாக, கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்து வாகனங்களை பொருத்தி மேசாடி செய்துள்ளதாக நிதி அமைச்சருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மோசடிகள் எதனையும் செய்யாவிட்டால் பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு மஹிந்தானந்த, அமைச்சருக்கு சவால் விடுத்துள்ளார்.