இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்களுக்கு எவரேனும் பொறுப்பு சொல்ல வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த விசாரணைகள் தேவையற்றவை என தாம் கூறவில்லை எனவும் அதனை விடவும் வடக்கு கிழக்கு மக்கள் தங்களது எதிர்காலம் குறித்தே கரிசனை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக புதிய அரசியல் சாசனமொன்று உருவாக்கப்பட வேண்டுமென்பதனை சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் என்ற விடயம் நல்லிணக்கத்தின் ஒர் அங்கமே தவிர அது மட்டுமே நல்லிணக்கத்தை ஏறபடுத்திவிடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.