156
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மக்கள் வழங்கிய ஆணை உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் சில அமைச்சர்களும் இவ்வாறு செயற்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி தலையீடு செய்ய நேரிட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும் இவ்வாறு உதாசீனம் செய்து வரும் சில தரப்பினருக்கு மாவட்ட ரீதியான மக்கள் அங்கீகாரம் கூட கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love