அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப்பின் தீர்மானம் சரியானதே என சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட் தெரிவித்துள்ளார். ட்ராம்ப் பயணத் தடை விதி;த்தது பயங்கரவாதிகளுக்கு அன்றி சிரிய மக்களுக்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்குலக நாடுகளுக்குள் ஊடுறுவ முயற்சிக்கும் தீவிரவாதிகளை தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய வானொலிச் சேவை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளை தடுக்கும் நோக்கில் ட்ராம்ப் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாகவே தாம் கருதுவதாகவும், சிரிய மக்களுக்கு எதிரானதல்ல எனவும் குறிப்பிட்டுள்ள அவர் டராம்பின் சிரியா குறித்த கொள்கை பற்றி தமக்கு இன்னும் போதிய தெளிவு கிடையாது எனவும் அதனால் கருத்து வெளியிடப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.