தேவையான வகையில் தீர்ப்பு அளிப்பதாக கூறியதனால் மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வரகாபொல பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டு மறுதினம் அப்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தம்மை தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார் என குறிப்பிட்டுள்ள அவர் இது பற்றிய விபரங்களை தாம் இதுவரையில் வெளியிட்டதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தேவையான வகையில் வழக்குத் தீர்ப்புக்களை வழங்குதவதாகவும் தம்மை பதவியிலிருந்து நீக்கிவிட வேண்டாம் எனவும் மொஹான் பீரிஸ் கேட்டதாகவும் இவ்வாறான ஓர் நபரை பதவியில் நீடிப்பது ஆபத்தானது எனக் கருதியே அவரை பணி நீக்கியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.