முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். சந்த ஹிரு சேய நிர்மானம் தொடர்பிலான விசாரணைகளுக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அழைக்கப்பட்டுள்ளார்.
மிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சில மோசடிகள் தொடர்பிலும் கோதபாயவிற்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கோதபாய ராஜபக்ஸ இன்றைய தினம் கைது செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் எதுவும் கிடையாது என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுங்கத் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் தொடர்பில் கோதபாயவிடம் விசாரணை
சுங்கத் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யுத்த வெற்றியை நினைவூட்டும் வகையில் அனுராதபுரத்தில் நிர்மானிக்கப்பட்டிருந்த சந்தஹிரு சேயா என்ற விஹாரையில் தங்க புத்தர் சிலை மற்றும் அரச மரம் ஆகியன பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது.
இந்த சிலை மற்றும் அரச மரம் ஆகியனவற்றை உருவாக்குதற்கு சுங்கத் திணைக்களத்திடமிருந்து கடற்படையினர் தங்கம் பெற்றுக்கொண்டிருந்தனர் எனவும் முழு அளவில் தங்கத்தினால் சிலை உருவாக்கப்பட தங்கம் வேண்டியிருந்த போதிலும், தங்க மூலாம் மட்டுமே பூசப்பட்டு சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கோதபாயவிடம் விசாரணை நடத்த உள்ளனர்.