மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர் மார்லன் சமுவேல்ஸ் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு சமுவேல்ஸ் பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. முன்னதாக 12 மாதங்களும் மீளவும் 12 மாதங்களும் சமுவேல்ஸிற்கு போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அண்மையில் ஓர் பரிசோதனை நடத்தியதாகவும் அதன் பின்னர் சமுவேல்ஸ் பந்து வீசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், நடுவர்கள் மீளவும் பந்து வீச்சு பாணி தொடர்பில் சந்தேகம் வெளியிட்டால் மீளவும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மார்லன் சமுவேல்ஸ் போட்டிகளில் பந்து வீச அனுமதி
188
Spread the love