141
கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு கிராம மக்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் பிரஜைகள் குழுவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் மன்னாரில் இருந்து கேப்பாப்பிலவுக்கு சென்ற இந்த விசேட குழுவினர் மக்களின் காணிகளை விடுவிக்க கோரும் பதாதைகளை ஏந்திய படி ஊர்வலம் ஒன்றையும் மேற்கொண்டனர்.
Spread the love