வர்க்க அடிப்படையில் அரசியலை செய்யும் காலம் உருவாகியுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. கட்சி அடிப்படையிலான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வர்க்க அடிப்படையில் அரசியல் நடத்த வேண்டியயுள்ளதாக ஜே.வி.பி. இன் பொதுச் செயலாளர் ரில்வன் சில்வா இதனை தெரிவித்தார்.
அக்குரஸ்சவில்இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்த அமைச்சர்கள் இந்த அரசாங்கத்திலும் உள்ளதாகவும், ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டாலும், அமைச்சர்கள் தோல்வியடைய மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் பணத்தை களவாடும் நபர்களை ஐந்து வருடத்திற்கு ஒரு தடவை மாற்றி அமைக்கும் அரசியல் நிலையில் மாற்றம் தேவை எனத் தெரிவித்துள்ளார்.