170
தமிழக சட்டசபையின் கூட்டம் இன்று இடம்பெற்ற போது கதவுகள் அனைத்தையும் மூடி விட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டிருந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரினார்.
சபை கூடியதும், எதற்காக அது கூட்டப்பட்டுள்ளது என்பதை சபாநாயகர் தனபால் அறிவித்ததன் பின்னர் முதலமைச்சர் தீர்மானத்தைக் கொண்டு வந்து உரையாற்றினார்.
அதன் பின்னர் அவைக் கதவுகள் மூடப்பட்டு 6 பிரிவாக சட்டமன்ற உறுப்பினர்களிடம் முற்பகல் 11.30 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love