நம்பிக்கை வாக்கெடுப்புக்கு திமுகவினர் இடையூறு செய்ததாக குற்றம்சாட்டி அக்கட்சி எம்.எல்.ஏக்களை கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
சட்டசபை ஒத்திவைத்த பின்னர் மீண்டும் 1 மணிக்கு சபை மீண்டும் கூடியவேளை ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை விடுத்தனை சபாநாயகர் ஏற்காததால் திமுகவினர் கோஷமிட்டனர்.
இதனால் சபையில் இருந்து திமுக சட்டசபை உறுப்பினர்கள் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதனைத் தொடர்ந்து அவைக் காவலர்கள் புகுந்து திமுகவினரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியயதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
–
தமிக சட்டட்டசபையில் இன்று இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட அமளியை அடுத்து, சட்டசபை வளாகத்தில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, இன்று தனது பெரும்ம்பான்மையை நிரூபிக்கும் வகையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த தனபால், வாக்கெடுப்பை எவ்வாறு நடத்துவது என்பது சபாநாயகரின் உரிமை என்றும், அந்த உரிமையில் யாரும் தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அமளி காரணமாக சபை ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் சட்டசபை வளாகத்தில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதால், அதிரடிப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளதுடன் தலைமை செயலகம் செல்லும் வீதிகள் மூடப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.