அமெரிக்காவின் தெற்கு எல்லையில் சுவர் எழுப்பும் விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மெக்ஸிக்கோவில் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகள், மாநில ஆளுநர், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் என பல முக்கியஸ்தர்களுடன் அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் கருத்து தெரிவித்திருந்த போது, நாம் அனைவரும் ஒற்றுமையாய் இருக்கவே விரும்புகின்றோம் எனவும் எம்மை யாராலும் பிரிக்க முடியாது எனவும் மக்களை வேறுபிரித்து பார்க்கும் ட்ரம்பை வெறுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.