இஸ்லாமிய தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு ரஸ்யாவுடன், ஐரோப்பா இணைந்து செயற்பட வேண்டுமென ஜெர்மன் அதிபர் அஞ்சலா மோர்கல் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான உறவுகள் சவாலுக்கு உரிய வகையில் காணப்படுகின்ற போதிலும், இஸ்லாமிய தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு ரஸ்யாவுடன் இணைந்து செயற்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். முனிச்சில் நடைபெற்ற பாதுகாப்புப் பேரவை மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் அமெரிக்க துணை ஜனாதிபதி மிக் பென்ஸூம் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ள அவர் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முஸ்லிம் நாடுகளை இணைத்துக் கொள்வது பொருத்தமாகாது என குறிப்பிட்டுள்ளார்.