சமூக ஊடக வலையமைப்புக்களை பயன்படுத்துவோருக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக முகநூல் ஊடாக அறிமுகம் ஆகும் நண்பர்களிடம் சொந்த விபரங்களை வழங்க வேண்டாம் என கோரியுள்ளனர்.
இவ்வாறு தகவல்களை வழங்குவதன் மூலம் பல்வேறு மோசடிகள் இடம்பெறக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இலங்கைகளில் இருந்து நிதிமோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜைகள் 10 பேரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்கள் நேற்றைய தினம் கடுவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவர்கள் சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்துள்ளனர்.