ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தைச் சேர்ந்த இருவரை இன்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்படவுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்புடைய நேற்றைய தினம் இராணுவ மேஜர் உள்ளிட்ட மூன்று படையதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூன்று இராணுவத்தினரையும் எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் நேற்று கல்கிஸ்ஸை நீதவானிடம் முன்னலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இராணுவ மேஜர் ஒருவர் உட்பட மூன்று இராணுவத்தினரே குற்ற புலனாய்வுப் பிரவினரால் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஊடகவியலார் கீத் நொயர் மீது கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.