146
முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடமாகாண பாடசாலைகளில் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
வடமாகாண பாடசாலைகளில் நாளை காலை 7.30 தொடக்கம் 8.30 மணிவரையில் ஒரு மணிநேரம் கவனயீர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபடவுள்ளனர்.
கேப்பாபுலவு மக்கள் கடந்த 31 ஆம் திகதி முதல் தமது சொந்த காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 20 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love