பிாித்தானியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் ஒரு பவுண்ட்ஸ் நாணயங்களில் மாற்றம் வரவுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள ஒரு பவுண்ட்ஸ் நாணயங்களில் முப்பதில் ஒன்று போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ள நிலையில் புதிய நாணயங்களை வெளியிட உள்ள தாக பிரித்தானிய வங்கி அறிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்காக வெளியிடவுள்ள புதிய நாணயம் இருவேறு உலோகங்களால் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை தற்போது புழக்கத்தில் உள்ள ஒரு பவுண்ட்ஸ் நாணயங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதியில் இருந்து செல்லுபடியாகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.