183
ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 54 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாடியது. இதன்படி ஆப்கானிஸ்தான் அணி ஐம்பது ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கட்டுக்களை இழந்து 238 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்தாடிய சிம்பாப்வே அணி 42.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 184 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
Spread the love