கலப்பு முறையிலான தேர்தல் சிறுகட்சிகளை பெரிதும் பாதிக்கும் என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. பல்கட்சி அரசியல் நடவடிக்கைகளை முடக்கும் வகையில் கலப்பு முறை தேர்தல் அமைந்துள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல பெலவத்தையில் அமைந்துள்ள ஜே.வி.பி தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி கட்சியை அரசியலிலிருந்து ஓதுக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து இந்த கலப்பு முறையிலான தேர்தலை நடத்த முயற்சிப்பதாகவும் எனினும் ஜே.வி.பி மீது மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையானது சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பெரும் தலையிடியாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் கலப்பு முறையிலான தேர்தலை நடத்துவதனால் பல்கட்சி அரசியலை நடாத்துவதற்கு பெரும் இடையூறு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.