194
ஈரான் மூன்றுநாள் ராணுவ போர் ஒத்திகை ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளது. ஈரானின் மத்திய பகுதியில் உள்ள பாலைவனத்தில் இடம்பெற்ற இந்த ஒத்திகையின்போது, சக்திவாய்ந்த அதிநவீன ஏவுகணையை ஏவி பரிசோதித்ததாகவும் இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை பரிசோதனை செய்ததனைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்திருந்த அமெரிக்கா, ஈரானை கண்காணிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love