Home இலங்கைஎல்லை நிர்ணய அறிக்கைக்கு சிறுகட்சிகள் எதிர்க்கின்றன – மனோ கணேசன்

எல்லை நிர்ணய அறிக்கைக்கு சிறுகட்சிகள் எதிர்க்கின்றன – மனோ கணேசன்

by admin


எல்லை நிர்ணய அறிக்கைக்கு சிறு கட்சிகள் எதிர்ப்பை வெளியிடுவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பழைய முறையிலேயே நடத்தப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

இந்த விடயம் குறித்து சிறு கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தயாரிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை சிறுகட்சிகளிடம் காண்பிக்காது அவை வர்த்தமானியில்  அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வகையிலேயே எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அவர் அனைத்து சிறுபான்மை கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரதமர் அறிவுறுத்தல் வழங்கிய போதிலும், துறைசார் அமைச்சர் ஏதேச்சாதிகார போக்கில் தீர்மானம் எடுத்து அறிக்கையை வர்த்தமானியில் பிரசூரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More