ஏழு நாடுகளை இலக்கு வைத்து புதிய பயணத்தடை விதிக்கும் முயற்சியில் டொனால்ட் ட்ராம்ப் நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் அண்மையில் தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஏழு நாடுகளின் பிரஜைகள் மீது பயணத்டை விதித்திருந்தார். எனினும் இந்த தீர்ப்பினை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து குறித்த ஏழு நாடுகளையும் இலக்கு வைத்து ட்ராம்ப் அரசாங்கம் மற்றுமொரு பயணத்தடை உத்தரவினை அறிமுகம் செய்துள்ளது. இந்த பயணத் தடை உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புகலிடம் வழங்குதல் மற்றும் நாட்டுக்குள் பிரஜைகளை அனுமதித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி புதிய தடை உத்தரவினை ட்ராம்ப் பிறப்பித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.