பழைய முறையிலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சிறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. விருப்பத் தெரிவு முறையில் தேர்தல் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி ஆகியனவற்றின் பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, நேற்று அலரி மாளிகையில் சந்தித்துள்ளனர்.
புதிய முறையில் தேர்தல் நடத்தப்பட்டால் சிறு கட்சிகளுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என சிறு கட்சிகளின் தலைவர்கள் பிரதமருக்கு சுட்டிக்காட்டியுள்ளனர். புதிய முறையில் தேர்தல் நடத்தப்பட்டால் தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.