மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியிடம் இன்றைய தினம் விசாரணை நடத்தப்பட உள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளின் முதல் கட்டமாக மத்திய வங்கியின் தற்போதைய ஆளுனரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இன்றைய தினம் காலை 10.00 மணிக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் நியமிக்கப்பட்ட மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் காலத்தில் பாரியளவில் மத்திய வங்கியில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மத்திய வங்கியின் தற்போதைய ஆளுனரிடம் இன்றைய தினம் விசாரணை நடத்தப்பட உள்ளது.