இலங்கை குறித்த ஆவணப்படத்தை ஒளிபரப்பிய மலேசிய செயற்பாட்டாளர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மலேசிய செயற்பாட்டாளரான லெனா ஹென்றி (Lena Hendry ) மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
நோ பயர் சூன் (No Fire Zone) என்ற ஆவணப்படத்தை திரையிட்டமை தொடர்பில் லெனா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மலேசிய தணிக்கை சபையினால் அனுமதியளிக்கப்படாத ஆவணப்படமொன்றே இவ்வாறு திரையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்குத் தொடர்பில் லெனா குற்றவாளி எனவும், இது தொடர்பான தண்டனை மார்ச் மாதம் 22ம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லெனாவின் தரப்பு நியாயங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி அவரது சட்டத்தரணிகள் சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த தீர்ப்பிற்கு எதிராக நிச்சயமாக மேன்முறையீடு செய்யப்படும் என லெனாவின் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.