அரசாங்கத்தினால் முழு அளவில் புதிய அரசியல் சாசனமொன்று உருவாக்கப்பட முடியாது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறைமைக்கும், ஐக்கியத்திற்கும் குந்தகம் ஏற்படக் கூடிய வகையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப் போவதில்லை எனவும் நாட்டின் இறைமையை பாதிக்கும் வகையில் அரசியல் சாசனம் அமைக்கப்படாது என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய எந்தவொரு திருத்தமும் அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மேல் நீதிமன்ற நீதிபதியாக ராமநாதன் கண்ணன் நியமிக்கப்பட்டதில் எவ்வித விதி மீறல்களும் சட்ட மீறல்களும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.