புகலிடக் கோரிக்கையாளர்கள் கௌரவமாக வரவேற்கப்பட ணே;டுமென பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த நிலைப்பாட்டில் அடிப்படை மாற்றம் தேவை என சுட்டிக்காட்டியுள்ள அவர் செல்வந்த நாடுகள் சுயநல அடிப்படையில் செயற்படுவதனை தவிர்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நாட்டையும் தனிப்பட்ட ரீதியில் விமர்சனம் செய்யாத பாப்பாண்டவர் கருத்துக்கள் அமெரிக்காவை சுட்டி நிற்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் உதாசீனம் செய்யப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்படக் கூடாது எனவும், அவர்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாப்பாண்டவராக கடமை ஏற்றுக் கொண்டது முதல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக பாப்பாண்டவர் குரல் கொடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.