157
வடமாகாண சபையின் எந்த ஒரு நிதியும் இதுவரை திரும்பி செல்லவில்லை என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்து உள்ளார் . வடமாகாண சபையின் 85 ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாண சபை நிதி திரும்புவதில்லை.
வடமாகாண சபையின் எந்த நிதியும் எக்காலத்திலும் திரும்பி செல்லவில்லை. அது பேப்பர்காரர்களுக்கு விளங்குதில்லை. அதனை பேப்பருக்கு சொல்பவர்களுக்கும் விளக்கமில்லை. என தெரிவித்தார்.
என் அமைச்சில் இருந்து ஒரு சதமும் திரும்பவில்லை.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் கருத்து தெரிவிக்கையில் ,
என்னுடைய அமைச்சின் கீழ் ஒதுக்கபப்ட்ட எந்த நிதியும் திரும்பி செல்லவில்லை. கடந்த வருடம் வந்த 438 மில்லியன் ரூபாயும் செலவழிந்து விட்டது ஒரு சதம் கூட மிச்சமில்லை. இன்னமும் நிறைய வேலை திட்டங்கள் உள்ளன அவற்றை முடிக்க நிதி போதாது உள்ளது. வேறு அமைச்சுக்களிடம் மேலதிக நிதி இருந்தால் அவற்றை எனது அமைச்சுக்கு மாற்றி தாருங்கள் என கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசாங்கம் எமக்கு 1400 மில்லியன் கடனாளி.
அதனை அடுத்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவிக்கையில் கடந்த வருடம் மத்திய அரசாங்கம் 3200 மில்லியன் நிதி ஒதுக்கி இருந்தது. அதில் 1800 மில்லியன் நிதியே கொடுக்கப்பட்டது மேலும் 1400 மில்லியன் ரூபாய்க்கு உரிய வேலை திட்டங்கள் நிறைவடைந்து அவற்றுக்கான பற்று சீட்டுக்கள் கை வசம் உள்ள போதிலும் அவற்றுக்கான நிதியினை வழங்க முடியாத நிலையில் உள்ளோம். மத்திய அரசாங்கம் எமக்கு 1400 மில்லியன் கடனாளி என தெரிவித்தார்.
வடமாகாண சபை சில விடயங்களில் வினைத்திறனற்றது.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கருத்து தெரிவிக்கையில் , வடமாகாண சபை வினைத்திறனற்ற நிலையில் செயற்பட்டு வருகின்றது. அதனால் குறித்த நிதியை குறித்த கால பகுதியில் செலவு செய்யாத நிலை காணப்படுகின்றது.
கடந்த 2014ம் ஆண்டுக்கான நிதி டிசம்பர் மாதம் 30ம் திகதி 60 மில்லியன் ரூபாய் செலவு செய்யாமல் இருந்தது அதனை வங்கியில் வைப்பிலிடுவது தொடர்பில் தீர்மானிக்கபட்டது.
அந்த நிதி செலவு செய்யபப்ட்டதா என 2015ம ஆண்டு மாசி மாதம் முதல் கேட்டு வந்தேன் ஆகஸ்ட் மாதம் தான் செலவு செய்து விட்டோம் என பதில் வந்தது.
இவ்வாறு மாகாண சபை வினைத்திறனற்ற நிலையில் செயற்பட்டதால் தான் மத்திய அரசு ஆரம்பத்தில் 6000 தொடக்கம் 6,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செயத்தது. தற்போது 3,800 தொடக்கம் 5000 மில்லியன் ஒதுக்கீடு செய்கின்றது என தெரிவித்தார்.
Spread the love