பாராளுமன்றில் தனியான கட்சியாக தமது கட்சி அங்கீகரிக்கப்பட வேண்டுமென ஜே.என்.பி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து ஜே.என்.பி விலகிக் கொண்டுள்ளதாகவும் எனவே தமது கட்சியை பாராளுமன்றில் ஓர் தனியான கட்சியாக அங்கீகரிக்க வேண்டுமெனவும் கோரியுள்ளது.
தாம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் இணைந்திருக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், இன்றைய தினமே இது குறித்து ஜே.என்.பி அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாகவே கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகிக் கொண்டமை குறித்து பாராளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.