பகிடிவதையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். மதுகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான பல்கலைக்கழக மாணவர் மாணவியர் மிகவும் நாகரீமாக நடந்து கொள்வதாகவும் ஒரு சில மாணவ மாணவியர் அமானுஸ்யமாக பகிடிவதைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ள அவர் பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை இல்லாதொழிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு பொறுப்பு உண்டு எனவும், அந்தப் பொறுப்பினை அரசாங்கம் எவ்வித தடையும் இன்றி நிறைவேற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டமை இலவச கல்வியின் துன்பியல் அனுபவம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.