இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2 -காணி விடுவிப்பு கோரிய மகஜர் யாழ்.மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினரால் வடக்கு மக்களுக்கு காணப்படும் அச்சுறுத்தல்களை அகற்றுவதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்த மகஜர்  யாழ்.மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுகுணவதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு  மக்களின் உரிமை போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், இலங்கையின்  பல பகுதிகளிலும் இருந்து இன, மத, மொழி பேதங்களை கடந்து யாழ்ப்பாணத்தில் இன்று ஒன்றிணைந்த   பல்வேறு அமைப்பினர், யாழ்.பேரூந்து நிலையத்தின் முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்திற்கு பேரணியாக சென்று இம் மகஜரை கையளித்துள்ளனர்.

மேலும் முகாம்களில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவுசெய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் பொது அமைப்புகள் பல, காணி விடுவிப்பு கோரி யாழ்ப்பாணத்தில் ஒன்று திரண்டன:

Feb 22, 2017 @ 09:32

தமிழர் தாயகத்தில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி, நாட்டின் பல பகுதிகளிலுள்ள பொது அமைப்புக்கள் திரண்டு யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றிணைந்து இன்று (புதன்கிழமை) முன்னெடுத்துள்ள இவ் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, யாழ். மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்று மகஜர் கையளிக்கப்படவுள்ளது.

யாழ். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், திருகோணமலை உதயம் மாவட்ட குடும்ப தலைமைத்துவ பெண்கள் அமைப்பு, திருகோணமலை மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், வலி. வடக்கு மீள்குடியேற்ற சங்கம், அம்பாறை பானம பற்றை பாதுகாப்பு அமைப்பு, மொனறாகலை ஊவா வெல்லஸ்ஸ மக்கள் அமைப்பு, மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கம், வலி. வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் ஒன்றியம், மயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கம், மயிலிட்டி மக்கள் அமைப்பு, நீர்கொழும்பு டெலிகொம் மனிதவலு போராட்ட ஒற்றுமை முன்னணி ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link