தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சனை பொறிக்கப்பட்ட தொப்பியை விமானத் தபால் மூலம், லண்டனுக்கு அனுப்ப முற்பட்ட குற்றச்சாட்டில் கைதான மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, சந்தேகநபர்களை மார்ச் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவர்களில் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாகவும் காவல்துறையினர் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேகநபர்களுக்கெதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய முடியாதென அவர்கள் சார்பில் முன்னலையான சட்டத்தரணிகள் வாதிட்ட போதும் அதனை நீதவான் நிராகரித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.