இலங்கை பிரதான செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 2வது நாளாக தொடர்கின்றது

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாகாண, மத்திய அரசாங்கம் தமக்கான தொழில் வாய்ப்புகளை வழங்க வேண்டும் எனத் தெரிவித்து  நேற்று  செவ்வாய்க்கிழமை முதல் காலவரையறையின்றி சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்கா மணிக்கூட்டுக் கோபுரத்தின் முன்னால் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள்  தங்களது எதிர்காலம் தொடர்பில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும் எனவும்  தெரிவித்துள்ளனர்.


தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது போனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள  அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தவேண்டிய நிலையேற்படும் எனவும்  அவர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link