மட்டக்களப்பு களுதாவளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரான 31 வயதான நேசகுமார் விமல்ராஜ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுதாவளை கடற்கரை வீதியிலுள்ள அவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபர்கள் அவரை வெளியே அழைத்து அவர்மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் விசாணைகளில் ஈடுபட்டுள்ளனர்