156
அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வெளியிட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட எட்வட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் இலங்கையர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஸ்னோவ்டனுக்கு உதவியவர்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக அதிகாரிகள் ஹொங்கொங்கிற்கு சென்றிருந்தனர் என தெரிவிக்கக்ப்படுகின்றது. சீன ஊடகமொன்று இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.
ஹொங்கொங் காவல்துறையினர் குறித்த இலங்கையர்களுக்கு போதியளவு பாதுகாப்பை வழங்கியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Spread the love