Home இலங்கைதமிழ் மக்கள் மீது இன வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக இரா.சம்பந்தன் குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் மீது இன வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக இரா.சம்பந்தன் குற்றச்சாட்டு

by admin


தமிழ் மக்கள் மீது இன வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக தெரிவித்துள்ள எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்   நாட்டில் சம உரிமைகளை வழங்குமாறு கோரி போராட்டம் நடத்துவோர் மீது இனவன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகத்  தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் வரையில் தமிழ் மக்கள் மீதான இனவன்முறைகளை தவிர்க்க முடியாது எனத் தெரிவித்துள்ள அவர் நாட்டின் சமவுரிமையுடைய பிரஜைகளாக வாழ்வதற்காக சம உரிமைகளை வழங்குமாறு கோரி போராட்டம் நடத்துவோர் மீது இனவன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும்  தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக இவ்வாறான ஓர் நிலைமை நீடித்தமையே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு உந்தியது என சுட்டிக்காட்டியுள்ள அவர் இனப்பிரச்சினையானது தற்போது சர்வதேச ரீதியிலான ஓர் பிரச்சினையாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More